உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  கோணசமுத்திரம் பேருந்து நிறுத்த நிழற்குடை கிடங்காக மாறிய அவலம்

 கோணசமுத்திரம் பேருந்து நிறுத்த நிழற்குடை கிடங்காக மாறிய அவலம்

பள்ளிப்பட்டு: பேருந்து நிலையத்தில் உள்ள நிழற்குடை, கட்டுமான பொருட்களை இருப்பு வைக்கும் கிடங்காக மாற்றப்பட்டுள்ளது. பள்ளிப்பட்டு ஒன்றியம், கோணசமுத்திரம் கிராமத்தில் பேருந்து நிறுத்ததம் செயல்பட்டு வருகிறது. பொதட்டூர்பேட்டையில் இருந்து அத்திமாஞ்சேரிபேட்டை வழியாக பயணிக்கும் பேருந்துகள், இந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன. இது தவிர, அரசு பேருந்து தடம் எண்: டி27, கோணசமுத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து நொச்சிலி வழியாக திருத்தணிக்கு நீண்டகாலமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக நிழற்குடை ஒன்று உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பேருந்து நிறுத்தத்தை ஒட்டியுள்ள ரேஷன் கடை, இடித்து அகற்றப்பட்டு புதிதாக கட்டப்பட்டது. இந்த கட்டுமான பணிக்காக, பேருந்து நிறுத்தத்தில் உள்ள நிழற்குடை, கட்டுமான பொருட்களை வைக்கும் கிடங்காக மாற்றப்பட்டது. இதற்காக நிழற்குடையில் தகடுகள் கொண்டு தடுப்பு சுவர் மற்றும் கதவு பொருத்தப்பட்டது. ரேஷன்கடை கட்டி முடிக்கப்பட்ட பின், அதே பகுதியில் ஊர்ப்புற நுாலகம் கட்டுமான பணி துவங்கியது. இதற்கும் இந்த நிழற்குடை பயன்படுத்திக்கொள்ளப்பட்டது. ஆனால், இதுவரை இந்த நிழற்குடை பயணிகளின் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு வரப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர். நிழற்குடையை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை