உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

திருவள்ளூர்: தமிழ் வளர்ச்சி துறை சார்பில், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற உள்ளது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் 1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு, திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு, 15,000 ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. நடப்பாண்டிற்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, திருவள்ளூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நடைபெற உள்ளது. அரசு, அரசு உதவிபெறும், தனியார் மற்றும் மத்திய அரசு பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். ஏற்கனவே, பரிசு பெற்றவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. பங்கேற்க விரும்புவோர், https://tamilvalarchithurai.org/tkm என்ற இணையதளத்தில், நவ., 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தை, 044 - 2959 5450, 80560 10146, 98944 89428 ஆகிய மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !