உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி சார்- பதிவாளர் அலுவலகம் திறப்பு

திருத்தணி சார்- பதிவாளர் அலுவலகம் திறப்பு

திருத்தணி:திருத்தணி பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கி வந்த சார்-பதிவாளர் அலுவலக கட்டடம் பழுதடைந்ததால் கடந்த, 14 மாதங்களுக்கு முன் கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. தொடர்ந்து அங்கு, 1,624 சதுரடியில் தரை தளம் மற்றும் முதல் தளம் கூடிய, 1.63 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக சார்-பதிவாளர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து திருத்தணியில் நடந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையின் நலத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர், திருத்தணி தி.மு.க.,- எம்.எல்.ஏ., சந்திரன், திருத்தணி நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினர்.நிகழ்ச்சியில், துணை பதிவுத்துறை தலைவர் சாமிநாதன், செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை தேவன், மாவட்ட பதிவாளர் பாவேந்தன், திருத்தணி சார்- பதிவாளர் சுகன்யா, திருத்தணி தாசில்தார் மலர்விழி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை