திருத்தணி மலைப்பாதை நுழைவாயில் சாலை சேதம்
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள். வாகனங்கள் வாயிலாக மலைப்பாதை வழியாக செல்கின்றனர். மலைப்பாதை நுழைவாயிலில் உள்ள மாநில நெடுஞ்சாலை சேதம் அடைந்துள்ளது.நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் அமைக்க தோண்டப்பட்ட பள்ளங்களை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சீரமைக்காமல், பல மாதங்களாக அலட்சியம் காட்டி வருகின்றனர்.இதனால், கோவிலுக்கு வாகனங்களில் செல்லும் பக்தர்கள், நெடுஞ்சாலை பள்ளத்தில் சிக்கி, தினமும் 10க்கும் மேற்பட்டோர் தவறி விழுந்து காயமடைந்து செல்கின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் அதிகளவில் விபத்துகளில் சிக்கி தவிக்கின்றனர்.அதேபோல், திருத்தணி - அரக்கோணம் சாலையில் இருந்து மேட்டுத் தெருவிற்கு திரும்பும் பகுதியில் சாலையில் 'மெகா' பள்ளம் ஏற்பட்டுள்ளது.இதுதவிர, அரக்கோணம் சாலையில் உள்ள வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசப்படாமல் உள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். திருத்தணி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால், திருத்தணி நகரத்தில் விபத்துக்கள் அதிகளவில் நடக்கின்றன.எனவே, கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, சேதமடைந்த நெடுஞ்சாலையை சீரமைக்க உத்தரவிட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.