உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர்: புகார் பெட்டி;சாலையில் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

திருவள்ளூர்: புகார் பெட்டி;சாலையில் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

சாலையில் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

திருத்தணி நகராட்சி ம.பொ.சி.சாலையில் இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி ஆகிய இரு வங்கிகள் அருகருகே இயங்கி வருகிறது. இந்த வங்கிகளுக்கும் தினமும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து தங்களது பண வர்த்தனை செய்து செல்கின்றனர். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இரு சக்கர வாகனத்தில் வங்கிகளுக்கு வருகின்றனர். வங்கிகள் முன் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதியில்லாததால், தங்களது வாகனங்களை நெடுஞ்சாலை யிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றன. போக்குவரத்து நெரிலை தவிர்க்கவும், வாகனங்களை சாலையில் நிறுத்துவதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்- -- எஸ்.கோதண்டன், திருத்தணி.

மூடியில்லாத 'மேன்ஹோல்

'கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், மாநில எல்லையோர சோதனைச்சாவடி அமைந்துள்ளது. அங்கு, பாதாள மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஆந்திராவில் இருந்து தமிழகம் நோக்கி வரும் வாகனங்களுக்கான சோதனைச்சாவடியில், மழைநீர் வடிகால்வாய் 'மேன்ஹோல்' ஒன்றில் மூடி இன்றி உள்ளது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தான சூழல் நிலவி வருகிறது. உடனடியாக அதற்கு மூடி அமைத்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்.- எஸ்.சுரேஷ்பாபு, கும்மிடிப்பூண்டி.

பாஞ்சாலி நகரில் பன்றி தொல்லை

திருவாலங்காடு ஊராட்சி பாஞ்சாலி நகர் பகுதியில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகிறது. பன்றிகள் குப்பை உள்ள இடங்களை தேடி சென்று கிளறி வருகின்றன. இதனால் பாஞ்சாலி நகர் பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.இந்நிலையில் ஊராட்சியில் சுற்றி திரியும் பன்றி கூட்டங்களை ஒழிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஆர். திவாகரன், திருவாலங்காடு.

சேதமான பயணியர் நிழற்குடை

சென்னை- --திருத்தணி தேசிய நெடுஞ்சாலை, லட்சுமாபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தினமும் பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் அரசு, தனியார் ஊழியர்கள் திருத்தணி மற்றும் திருவள்ளூர் மார்க்கத்தில் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை முறையாக பராமரிக்காததால் தற்போது மேற்கூரை சேதம் அடைந்துள்ளது.இதனால் மழை பெய்யும் போது, பயணியர் நிழற்குடையில் ஒதுங்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும் நிழற்குடை அருகே செடிகள் மற்றும் புல் வளர்ந்து வருவதால், விஷ ஜந்துக்கள் நடமாடும் அபாய நிலை உள்ளது. எனவே நிழற்குடை சீரமைத்து, சுத்தப்படுத்த வேண்டும்.- எஸ். பழனி, லட்சுமாபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ