உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர்: புகார் பெட்டி;சின்டெக்ஸ் தொட்டிக்கு குடிநீர் நிரப்பப்படுமா?

திருவள்ளூர்: புகார் பெட்டி;சின்டெக்ஸ் தொட்டிக்கு குடிநீர் நிரப்பப்படுமா?

சின்டெக்ஸ் தொட்டிக்கு குடிநீர் நிரப்பப்படுமா?

திருத்தணி, காந்தி நகர் திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில், நகராட்சி சார்பில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைத்து, மின்மோட்டார் வாயிலாக தண்ணீர் நிரப்பி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொட்டியில் இருந்து காந்திரோடு மெயின் மற்றும் குறுக்கு தெருவில் உள்ள குடும்பத்தினர், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் குடிநீர் பிடித்து செல்கின்றனர். இந்நிலையில், 10 நாட்களுக்கு மேலாக இந்த தொட்டியில் குடிநீர் நிரப்பப்படாததால், மாணவர்கள் மற்றும் அப்பகுதியினர் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, குடிநீர் தொட்டிக்கு தினமும் குடிநீர் நிரப்பி வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.--- எஸ்.மாதவன், திருத்தணி.

புதுவாயல் சந்திப்பில் நிழற்குடை அமையுமா?

கவரைப்பேட்டை அடுத்த புதுவாயல் சந்திப்பில், ஆந்திரா, சென்னை மற்றும் பெரியபாளையம் நோக்கி செல்லும் மூன்று சாலைகள் சந்திக்கின்றன.இங்கு, கோவில் பக்தர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என, எப்போதும் நுாற்றுக்கணக்கான பேருந்து பயணியர் காத்திருப்பது வழக்கம். இந்த சந்திப்பில் பயணியர் நிழற்குடை இல்லாததால், பயணியர் அனைவரும் வெயில், மழையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள், உடனடியாக அந்த சந்திப்பில் பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.சதானந்தன், கும்மிடிப்பூண்டி.

சேதமடைந்த சாலையால் விபத்து அபாயம்

திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் கிராமத்தில் ஆறு தெருக்கள் உள்ளன. இங்குள்ள கீழ் தெருவில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி நிர்வாகம் சார்பில், சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை தரமாக அமைக்காததால், தற்போது சாலை சேதம் அடைந்துள்ளது. இதுதவிர சாலையின் நடுவே தண்ணீர் குழாய் புதைப்பதற்காக ஆங்காங்கே பள்ளம் தோண்டி குழாய் அமைத்துள்ளனர்.ஆனால், இதுவரை சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.---- - எஸ்.அசோக்குமார், பட்டாபிராமபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ