உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் புகார் பெட்டி;@ரயில் பயணியருக்கு பாதுகாப்பில்லை

திருவள்ளூர் புகார் பெட்டி;@ரயில் பயணியருக்கு பாதுகாப்பில்லை

ரயில் பயணியருக்கு பாதுகாப்பில்லைசென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் பயணியருக்கு உரிய பாதுகாப்பு இல்லை.இரவில் பயணம் செய்வோரிடம் செயின் பறிப்பு, பெண்களை கேலி கிண்டல் செய்வது போன்ற அத்துமீறும் செயல்கள் நடைபெறுகின்றன.கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில், 17 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில், கொருக்குப்பேட்டை தவிர வேறு எங்கும் ரயில்வே காவல் நிலையம் இல்லை.இந்நிலையில், விபத்து நேர்ந்தாலோ, வழிப்பறி நடந்தாலோ கொருக்குப்பேட்டை ரயில்வே காவலரிடம் புகார் செய்து, அவர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே, இம்மார்க்கத்தில் ரயில்வே காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

அபாய நிலையில் மின்கம்பம் மின்வாரியம் மெத்தனம்

போளிவாக்கம் ஊராட்சிக்குட்பட்டது பாக்குபேட்டை. இப்பகுதியில் உள்ள இருளர் காலனி குடியிருப்பு பகுதியில், 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இங்குள்ள தெருக்களில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளன. இதனால், குடியிருப்புவாசிகள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து, மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.ராஜ், போளிவாக்கம்.

கூடுதல் மின்சார ரயில்கள் இயக்க எதிர்பார்ப்பு

திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரைக்கு மிக குறைந்த மின்சார ரயில்களே இயக்கப்படுகின்றன. அதாவது, அதிகாலை 4:30 மணி, காலை 5:40 மணி, 6:30 மணி மற்றும் காலை 7:00 மணி ஆகிய நேரத்தில் திருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில், காலை 8:50 மணிக்கு சென்னை கடற்கரைக்கும், காலை 10:10 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கும் மின்சார ரயில் இயக்கப்படுகிறது. அதன்பின், மதியம் 12:50 மணிக்கு தான் மின்சார ரயில் இயக்கப்படுகிறது. அதாவது, இரண்டரை மணி நேரத்திற்கு மேல் மின்சார ரயில் இல்லாததால், திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், சென்னைக்கு செல்லும் வியாபாரிகள் மற்றும் நோயாளிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே கூடுதல் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.---- க.விநாயகம், திருத்தணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை