உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

திருத்தணி : மத்திய அமைச்சர் சிதம்பரம் பிறந்த நாளையொட்டி, திருத்தணி காங்கிரஸ் கட்சி சார்பில், 80 பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருத்தணி நகர காங்கிரஸ் கட்சியினர் சார்பில், பெரியார் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது. மாவட்ட பொதுச் செயலர் திருத்தணி திருமலை தலைமை வகித்தார். இளைஞர் காங்கிரஸ் தொகுதி செயலர் கோவிந்தராஜ் வரவேற்றார். ஜோதிநகர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக இளைஞர் காங்கிரஸ் கட்சியின் திருத்தணி தொகுதி தலைவர் கோகுலா கலந்து கொண்டு, 80 பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில், பை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து ஏழை மாணவர்கள் பத்து பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ