உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கூலி ஆட்கள் கிடைக்காததால் காய்கறி பயிரிட்ட விவசாயிகள் அவதி

கூலி ஆட்கள் கிடைக்காததால் காய்கறி பயிரிட்ட விவசாயிகள் அவதி

திருத்தணி : காய்கறி பயிர் செய்த விவசாயிகள், கூலி ஆட்கள் கிடைக்காததாலும், விலையும் குறைவாக விற்பதால், விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்து உள்ளனர். திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகையில் பெரும்பாலான விவசாயிகள் கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி போன்ற காய்கறி வகையான பயிர் செய்துள்ளனர். குறிப்பாக கத்தரிக்காய் பயிர் ஒவ்வொரு விவசாயியும் ஒன்று முதல் ஐந்து ஏக்கர் வரை நிலப்பரப்பில் செய்துள்ளனர். இவர்கள் தினசரி காலையில் கூலி ஆட்களை வைத்து, தோட்டத்தில் காய்கறிகளை பறித்து பஸ்,வேன் மற்றும் இரு சக்கர வாகனம் மூலம் திருத்தணி காய்கறி மார்க்கெட்டிற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு விற்று உடனே பணத்தை பெற்று வீடு திரும்புகின்றனர். தற்போது கத்தரிக்காய், வெண்டைக்காய் விளைச்சலும் அதிகமாக உள்ளது. இதனால் இவற்றின் விலை சரிந்து விட்டது. ஒரு மாதம் முன்பு ஒரு கிலோ கத்தரிக்காய், 25 ரூபாய் வரை விற்று வந்தது. ஆனால் கடந்த வாரமாக ஒரு கிலோ 3 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை விற்கப்படுகிறது. விலை குறைவாக விற்பதால் கத்தரிக்காயை அறுப்பதற்கு வரும் கூலி ஆட்களுக்கு கூட கூலியை தர முடியவில்லை. சில விவசாயிகள் காய்கறி பறிப்பதற்கு, கூலி ஆட்கள் கிடைக்காததால் தங்களது தோட்டத்தை அழித்து வருகின்றனர். கணிசமான லாபம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் பயிரிட்ட விவசாயிகள் தற்போது, பெரும் நஷ்டம் அடைவதால் இனிவரும் காலத்தில், காய்கறி பயிர்களை செய்யக்கூடாது என்ற முடிவில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை