உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரசாயன கலவை இன்றி விநாயகர் சிலைகள் வைக்க எஸ்.பி., அறிவுரை

ரசாயன கலவை இன்றி விநாயகர் சிலைகள் வைக்க எஸ்.பி., அறிவுரை

திருவள்ளூர் : வரும் செப்டம்பர் முதல் தேதி விநாயகர் சதுர்த்தி, நாடெங்கும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. விழாவில் பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை, ஆங்காங்கே வைத்து, பூஜைகளை இந்துக்கள் செய்ய உள்ளனர்.விழாவின் போதும், சிலைகள் ஊர்வலத்தின் போதும், மதப் பிரச்னை, சட்டம் - ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, சிலை அமைப்பாளர்கள் மற்றும் போலீஸ் துறை சார்பில், அறிவுறுத்தல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடத்த எஸ்.பி., வனிதா உத்தரவிட்டுள்ளார்.மேலும், போலீஸ் துறையின் சார்பில், விதிமுறைகள் அடங்கிய அறிவுறுத்தல் கடிதம் அனைத்தும், போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, எஸ்.பி., வனிதா கூறியதாவது:'சிலை வைப்பதற்கு போலீஸ் அனுமதி பெற்று, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தில், சிலைகள் வைக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நாளில், போக்குவரத்துக்கு இடையூறின்றி ஊர்வலம் நடத்த வேண்டும்.ஊர்வலத்தின் போது, பிற மதத்தினரை புண்படுத்தும்படியோ, மத உணர்வுகளை தூண்டும்படியோ, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும்படியோ நடந்து கொள்ளக் கூடாது.தண்ணீரில் எளிதில் கரையும் மண்ணால் செய்த விநாயகர் சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும். சுட்ட களிமண்ணால் செய்யக்கூடாது. ரசாயனக் கலவையை பயன்படுத்தக் கூடாது. வாகனங்களில் ஒலிப் பெருக்கி கட்ட அனுமதியில்லை' என, சிலை அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு எஸ்.பி., கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை