உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முத்தமிழ் மன்ற துவக்க விழா

முத்தமிழ் மன்ற துவக்க விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த, திருப்பாசூர் கொசவன்பாளையம் திருமுருகன் கலை அறிவியல் பெண்கள் கல்லூரியில், திரு.வி.க., தமிழ்ப் பேரவை சார்பில் முத்தமிழ் மன்ற துவக்க விழா நடந்தது.கல்லூரி நிர்வாக அறங்காவலர் மனோகரன் தலைமை வகித்தார். தமிழ்த் துறைத் தலைவர் பரமசிவம் வரவேற்புரை ஆற்றினார். விழாவிற்கு திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் அறிவுமதி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் சுப்பிரமணியம், நிர்வாக அலுவலர் ஞானபிரகாசம், பேராசிரியை பகுத்தறிவு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.நிகழ்ச்சிகளை பேராசிரியை வேதநாயகி தொகுத்து வழங்கினார். இதில் கல்லூரி அறங்காவலர்கள், தாளாளர் மற்றும் கல்லூரி மாணவியர் கலந்து கொண்டனர். மாணவி பவானி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை