உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 200 பயனாளிகளுக்கு 800 கிராம் தங்கம் : ரமணா வழங்கினார்

200 பயனாளிகளுக்கு 800 கிராம் தங்கம் : ரமணா வழங்கினார்

திருவள்ளூர் : மாவட்ட சமூக நலத்துறையின் சார்பாக, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், 200 பயனாளிகளுக்கு 800 கிராம் தங்கமும், திருமண நிதியுதவியாக 56 லட்ச ரூபாய்க்கான காசோலைகளையும், மாநில கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ரமணா வழங்கினார்.நிகழ்ச்சிக்கு, கலெக்டர் அஷிஷ் சட்டர்ஜி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் ரமணா பேசுகையில், ''இன்றைய தினம் சமூக நலத்துறையின் சார்பாக, திருவள்ளூர் மாவட்டத்தில் 200 பேருக்கு திருமண உதவி வழங்கப்படுகிறது. இதில், 10ம் வகுப்பு படித்த பெண்களுக்கு திருமண உதவியாக 25 ஆயிரம் ரூபாயும், தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டப் படிப்பு படித்த பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது,'' என்றார்.நிகழ்ச்சியில், பூந்தமல்லி எம்.எல்.ஏ., மணிமாறன், பொன்னேரி எம்.எல்.ஏ., பொன்.ராஜா, திருவள்ளூர் நகர்மன்ற உறுப்பினர்கள் மஞ்சு ஏழுமலை, இந்தியன் வங்கி பொது மேலாளர் சுரேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, மாவட்ட வருவாய் அலுவலர் விசாகன் வரவேற்றார். சமூக நல அலுவலர் ரூத் வெண்ணிலா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்