உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வியாபாரியை மிரட்டிய மூவர் கைது

வியாபாரியை மிரட்டிய மூவர் கைது

கடம்பத்துார்:கடம்பத்துார் பகுதியில் பழைய இரும்பு கடை வியாபாரியிடம் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த மூவரை போலீசார் கைது செய்தனர். கடம்பத்துாரை சேர்ந்தவர் ஆனந்தராஜ், 54, இவர், பஜார் பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் வந்த சிற்றபாக்கத்தை சேர்ந்த சந்தோஷ், 22, இளவழகன், 27 , மகேஷ்குமார், 21 ஆகியோர், மாமூல் கேட்டு ஆனந்தராஜிடம் ரகளை செய்தனர். கத்தியைக் காட்டி கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுகுறித்து, ஆனந்தராஜ் அளித்த புகாரையடுத்து, கடம்பத்துார் போலீசார் மூவரையும் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை