| ADDED : நவ 27, 2025 03:26 AM
திருப்பாச்சூர்: திருப்பாச்சூரில் பராமரிப் பில்லாத பயணியர் நிழற்குடையில் செடிகள் வளர்ந்துள்ளதால், அப் பகுதி மக்கள் பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் அமைந்துள்ளது. இங்கிருந்து, கடம்பத்துார் செல்லும் நெடுஞ்சாலையில், ரேஷன் கடை அருகே பயணியர் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையை பயன்படுத்தி, திருவள்ளூர் மற்றும் கடம்பத்துார் பயணியர் சென்று வருகின்றனர். போதிய பராமரிப்பில்லாததால், இந்த நிழற்குடைகளின் முன் முட்செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும், நிழற்குடை அருகே ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வருவோர், விஷப்பூச்சி கள் நடமாட்டத்தால் பீதியடைந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, நிழற்குடையை சூழ்ந்து வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றி சீரமைக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.