| ADDED : செப் 16, 2011 03:45 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், ஆசிரியர்களுக்கு பொது மாறுதலுக்கான
கலந்தாய்வுக் கூட்டம் வரும் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில்
நடைபெறவுள்ளது.இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு
நகராட்சி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும்
ஆசிரியர்களுக்கான, 2011-12ம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்
கூட்டம் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில், அம்பத்தூரில் உள்ள, சர்.இராமசாமி
முதலியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள் ளது.இதன்படி, 19ம் தேதி முதுகலை
ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், இடைநிலை
ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள்
ஆகியோருக்கு மாவட்டத்திற்குள் மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெறும்.20ம் தேதி மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள், கலந்தாய்வில் பங்கேற்று
மாறுதல் ஆணைகள் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு
செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.