உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம்

அரசு கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம்

திருத்தணி:திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் நடந்த ரத்ததான முகாமில், 125 மாணவர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர்.சென்னை மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மற்றும் திருத்தணி ரோட்டரி சங்கம் ஆகியவற்றின் சார்பில், திருத்தணி அரசினர் கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் முனிரத்தினம் தலைமை வகித்தார். அரசு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத் தலைவர் கோபாலன் வரவேற்றார். முன்னாள் ரோட்டரி சங்கச் செயலர் டாக்டர் பொன்அரசு, பொருளாளர் மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் ரோட்டரி சங்கத் தலைவர் டாக்டர் மோகனன், சென்னை மருத்துவ கல்லூரி ரத்த வங்கி சேர்மன் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு ரத்ததான முகாமை துவக்கி வைத்தனர். இதில், 125 கல்லூரி மாணவ, மாணவியர் ரத்ததானம் வழங்கினர்.அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முகாமில் முன்னாள் தலைவர்கள் மகேந்திரகுமார், சென்னை மருத்துவக் கல்லூரி ஆண், பெண் செவிலியர்கள், உதவியாளர்கள், கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஆப்பிள்ராஜன், ஹேமநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சங்க உறுப்பினர் அய்யப்பன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்