உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தென் ஆப்ரிக்க கப்பல் ஊழியர் மாரடைப்பால் பலி

தென் ஆப்ரிக்க கப்பல் ஊழியர் மாரடைப்பால் பலி

பொன்னேரி:எண்ணூர் துறைமுகத்திற்கு நிலக்கரி ஏற்றி வந்த, தென் ஆப்ரிக்க கப்பலில் பணிபுரிந்த ஊழியர் மாரடைப்பால் பலியானார்.உக்ரைனி நாட்டைச் சேர்ந்தவர் யட்சுக் மைகோலா, 56. இவர் தென் ஆப்ரிக்காவில் உள்ள, தனியார் கப்பல் நிறுவனத்தில், ஆயிலர் மேனாக பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் 29ம்தேதி, தென் ஆப்ரிக்காவிலிருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டு, எண்ணூர் துறைமுகம் நோக்கி கப்பல் புறப்பட்டது.அதில், யட்சுக் மைகோலாவும் சென்றார். இம்மாதம் 4ம்தேதி, மொரிஷியஸ் தீவு அருகே கப்பல் கடலில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென இதய நோய் ஏற்பட்டது. டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பயனின்றி மாரடைப்பால் இறந்தார்.இதுகுறித்து, சென்னையிலுள்ள கிளியரிங் ஏஜென்சி நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் தென் ஆப்ரிக்க கப்பல், எண்ணூர் துறைமுகம் வந்தடைந்தது. கிளியரிங் ஏஜென்சி நிறுவனத்தைச் சேர்ந்த பிரதீப், 36, மீஞ்சூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் எண்ணூர் துறைமுகம் சென்று, யட்சுக் மைகோலாவின் பிரேதத்தை கைப்பற்றினர்.பிரேத பரிசோதனைக்காக, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, பிரேத பரிசோதனை முடிந்து, யட்சுக் மைகோலாவின் உடல், விமானம் மூலம் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ