உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மொபைல்போன் ரீசார்ஜ் ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

மொபைல்போன் ரீசார்ஜ் ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி : பொன்னேரி பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட மொபைல்போன் ரீசார்ஜ் ஆபரேட்டர்கள் இருந்து வருகின்றனர். இவர்கள் தனியார் மற்றும் அரசு மொபைல்போன் நிறுவனங்களின், ரீசார்ஜ் கூப்பன்களை விற்பனை செய்கின்றனர்.இதற்காக, தனியார் மொபைல்போன் நிறுவனங்கள், அவர்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கு 38 ரூபாய் கமிஷன் வழங்கி வந்தன. இந்நிலையில், ரீசார்ஜ் ஆபரேட்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த, 38 ரூபாய் கமிஷன் தொகையை, அந்நிறுவனங்கள் திடீரென, 33 ரூபாயாக குறைத்தன.மேலும், தனியார் நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள், 50 ரூபாய் ரீசார்ஜ் செய்தால், 38 ரூபாய்க்கே பேச முடிகிறது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. தனியார் மொபைல்போன் நிறுவனங்களின் இச்செயல்பாடுகளை கண்டித்து, பொன்னேரி பகுதி ரீசார்ஜ் வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சங்கத் தலைவர் ஜெகன்னாதன் தலைமையில் நடந்த ஆர்பாட்டத்தில், செயலர் ரமேஷ், துணைத் தலைவர் ரகுபதி, பொருளாளர் நரேஷ் மற்றும் 100க்கும் மேற்பட்ட செல்போன் ரீசார்ஜ் ஆபரேட்டர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ