உள்ளூர் செய்திகள்

கிராம சபை கூட்டம்

ஊத்துக்கோட்டை : பூண்டி ஒன்றியம், அம்மம்பாக்கம் ஊராட்சியில், தலைவர் ராகவன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடந்தது.பூண்டி வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) சூரிய நாராயணன் கலந்து கொண்டார். இதில், அம்மம்பாக்கம் காலனி, சீத்தஞ்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள மயானங்களைச் சீரமைத்தல் மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல், திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில், சீத்தஞ்சேரி பகுதியில் கழிவுநீர்க் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தேவந்தவாக்கம் ஊராட்சியில், தலைவர் ஆப்ரகாம் தலைமையில் நடந்த கூட்டத்தில், மைலாப்பூர் - தேவந்தவாக்கம் இடையிலான 2 கி.மீ., தூர சாலையைச் சீரமைத்தல், மைலாப்பூர் காலனியில் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து, புதிதாகக் கட்டுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கச்சூர் ஊராட்சியில், தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.பூண்டி ஊராட்சியில், தலைவர் ஆம்புரோஸ் தலைமையிலும், அனந்தேரி ஊராட்சியில், தலைவர் பிரகாஷ் தலைமையிலும், மாம்பாக்கம் ஊராட்சியில் தலைவர் கணேசன் தலைமையிலும், பெரிஞ்சேரி ஊராட்சியில் தலைவர் ரவி தலைமையிலும் நடந்தது. இதில், பின் தங்கிய பகுதிக்கான மானியத்திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்ட சமூக தணிக்கை விபரம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதேபோல், போந்தவாக்கம் ஊராட்சியில் தலைவர் ஜெகன்னாதன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ