உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  சிப்காட் வளாக சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

 சிப்காட் வளாக சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் மூன்று பார்க்கிங் வளாகங்கள் இருந்தும், சிப்காட் சாலைகள் ஓரம் நிறுத்தப்படும் வாகனங்களால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்திற்கு, தினமும் நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. நிர்வாக சிக்கல் காரணமாக, ஒவ்வொரு வாகனங்களாக தொழிற்சாலைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. எஞ்சிய வாகனங்கள் அந்தந்த தொழிற்சாலை முகப்பில் உள்ள சிப்காட் சாலைகளின் ஓரம் நிறுத்தப்படுகின்றன. இதனால், அவ்வழியாக செல்லும் பிற வாகனங்கள், அப்பகுதியை கடக்க முடியாதபடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. இரவு நேரங்களில், இதுபோன்று சாலையோரம் வாகனங்களை நிறுத்தி காத்திருக்கும் டிரைவர், கிளினர்களிடம், சிலர் வழிப்பறி செய்யும் சம்பவங்களும் நடப்பதாக கூறப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் விதமாக, சிப்காட் வளாகத்திற்கு உட்பட்ட மூன்று இடங்களில், 8 கோடி ரூபாய் செலவில், வாகன 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு பார்க்கிங் வளாகத்திலும், 100 கனரக வாகனங்கள் என, மூன்று இடங்களிலும், மொத்தம், 300 வாகனங்கள் நிறுத்தும் வசதி கொண்டது. சிப்காட் வளாகத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை பார்க்கிங் வளாகங்களில் நிறுத்த அறிவுறுத்த வேண்டும். சிப்காட் ரோந்து போலீசார் கண்காணித்து செயல்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை