உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / லாரி - டூ வீலர் மோதல் மெக்கானிக் உயிரிழப்பு

லாரி - டூ வீலர் மோதல் மெக்கானிக் உயிரிழப்பு

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன், 34; சென்னை கொருக்குப்பேட்டையில் இருசக்கர வாகன மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார்.இவர் நேற்று காலை, 'ஹோண்டா டியோ' இருசக்கர வாகனத்தில் கொருக்குப்பேட்டை செல்வதற்காக மீஞ்சூர் - திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.மீஞ்சூர் அடுத்த கவுண்டர்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, ஹரிகிருஷ்ணன் இருசக்கர வாகனம் மீது மோதியது.இதில், ஹரிகிருஷ்ணன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கனரக வாகனங்களால் தொடரும் விபத்துகளை கண்டித்து, கவுண்டர்பாளையம் பகுதிவாசிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். பின், சடலத்தை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ