உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / லாரி மோதிய விபத்து தந்தை பலி மகன் காயம்

லாரி மோதிய விபத்து தந்தை பலி மகன் காயம்

அரக்கோணம்:அரக்கோணம் ஏ.பி.எம்., சர்ச் பகுதியை சேர்ந்தவர் ஷேட்ராக் 64. இவரது மகன் அகஸ்டின் 37. இருவரும், எஸ்.ஆர்., கேட் நோக்கி, இருசக்கர வாகனத்தில் சென்றனர்.அப்போது, எதிரே வந்த லாரி மோதியதில், நிலைதடுமாறி ஷேட்ராக், அகஸ்டின் இருவரும் சாலையில் விழுந்தனர். இதில், ஷேட்ராக்கின் வலது கை மீது லாரி ஏறி இறங்கியதில் கை நசுங்கி பலத்த காயமடைந்தார். அகஸ்டினுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.அவர்களை மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், ஷேட்ராக் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை