உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

அரக்கோணம்:அரக்கோணம் டவுன் போலீசார் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், திருவள்ளூர் சாலை, காலிவாரி கண்டிகை, ஷா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை ரோந்து பணி மேற்கொண்டனர்.அப்போது, ஷா நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரித்தனர்.அதில், அரக்கோணம் அடுத்த ஜடேரியைச் சேர்ந்த பொன்மணி, 29, ஜோதி நகரைச் சேர்ந்த பூவரசன், 19, ஆகிய இருவரும் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.இதையடுத்து, அவர்களிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் எடையிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ