உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணல் கடத்தல் இருவர் கைது

மணல் கடத்தல் இருவர் கைது

திருவள்ளூர்:திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய போலீசார், நேற்று முன்தினம் இரவு புட்லுார் ரயில்வே மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 80 சாக்கு மூட்டைகளில் இருந்த 1 யூனிட் ஆற்று மணலையும், சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, வழக்கு பதிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், ஆற்று மணல் கடத்தி வந்த திருவூர் வேலு, 38, சுபேஷ்குமார், 30, இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை