உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  25 கிலோ எடை கஞ்சா கடத்திய இருவர் கைது

 25 கிலோ எடை கஞ்சா கடத்திய இருவர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே, 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் ரயில் நிலைய பகுதியில். போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, ரயிலில் இருந்து இறங்கிய இருவர், சந்தேகம் ஏற்படும்படி சுற்றித்திரிந்தனர். அவர்கள் வைத்திருந்த இரு பைகளை சோதனையிட்டபோது, 25 கிலோ எடை உள்ள கஞ்சா பாக்கெட்டுகள் சிக்கின. அதை பறிமுதல் செய்த போலீசார், ஒடிஷாவில் இருந்து ரயில் மார்க்கமாக கடத்தி வந்த, கோவை மாவட்டத்தை சேர்ந்த ராஜன், 40, ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த சித்தேஷ் கோரா, 43, ஆகியோரை கைது செய்தனர். ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி