உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கார் ஒட்டுனருக்கு கத்திகுத்து இரு மர்ம நபர்களுக்கு வலை

கார் ஒட்டுனருக்கு கத்திகுத்து இரு மர்ம நபர்களுக்கு வலை

திருவள்ளூர்:கடம்பத்துார் ஒன்றியம், மேல்நல்லாத்துார் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல், 26. இவருக்கு, வர்ஷா, 24, என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.கடம்பத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவருக்கு கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மருத்துவரை, 'மாருதி வேகன் ஆர்' காரில் ஏற்றிக் கொண்டு திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார்.அப்போது மீன் மார்க்கெட் சாலையில் இருவர் இருசக்கர வாகனத்தில் நின்ற கொண்டிருந்தனர். இதனால் கோகுல் காரில், ஹாரன் அடித்துள்ளார்.இதில் ஆத்திரமடைந்த இருவரில் ஒருவன், இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து ஆபாசமாக பேசி, தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். அருகிலிருந்தோர் வருவதைப் பார்த்ததும் இருவரும் தப்பியோடினர்.படுகாயமடைந்த கோகுல், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து கோகுல் அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ