உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பராமரிப்பில்லாத நீர்த்தேக்க தொட்டி வால்வு பழுதால் வீணாகும் குடிநீர்

 பராமரிப்பில்லாத நீர்த்தேக்க தொட்டி வால்வு பழுதால் வீணாகும் குடிநீர்

கூவம்: கூவம் ஊராட்சியில் பராமரிப்பில்லாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள குழாயின் வால்வு பழுதடைந்துள்ளதால், இரண்டு வாரமாக குடிநீர் வீணாகி வருகிறது. கடம்பத்துார் ஒன்றியம் கூவம் ஊராட்சியில் கொருக்கம்பேடு கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 20 ஆண்டுகளுக்கு முன், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டி, 10 ஆண்டுகளுக்கு மேல் பராமரிக்காததால், சேதமடைந்து பரிதாப நிலையில் உள்ளது. மேலும், குழாய் வால்வு பகுதி சேதமடைந்து, குடிநீரும் வீணாகி வருகிறது. மேலும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்யாமலேயே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், கூவம் ஊராட்சியில் ஆய்வு செய்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைத்து, குடிநீர் வீணாவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி