உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் ஜவுளி பூங்கா அமைக்க வலியுறுத்தல்

திருத்தணியில் ஜவுளி பூங்கா அமைக்க வலியுறுத்தல்

திருத்தணி:திருத்தணி சட்டசபை தொகுதியில், மத்துார், புச்சிரெட்டிப் பள்ளி, ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம், வங்கனுார், அத்திமாஞ்சேரி பேட்டை, பொதட்டூர்பேட்டை, மகான்காளிகாபுரம், முருகூர் ஆகிய பகுதிகளில், பல ஆயிரம் நெசவாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர்.அதே போல், திருத்தணி தொகுதியில், அரசு கலைக் கல்லுாரி ஒன்று மட்டுமே உள்ளதால், பள்ளிப்பட்டு, எரும்பி ஆகிய பகுதிகளில் இருந்து, 40-50 கிலோ மீட்டர் துாரம் மாணவ-மாணவியர் கல்லுாரிக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது எனவே மேலும் ஒரு அரசு கலைக்கல்லுாரி அமைக்க வேண்டுமென, கோரிக்கை உள்ளது.இந்நிலையில், திருத்தணி தி.மு.க.,- எம்.எல்.ஏ., சந்திரன் சட்டசபையில், நெசவாளர்கள் அதிகளவில் வசிக்கும் பொதட்டூர்பேட்டையில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். மாணவியர் பட்டப்படிப்பு படிப்பதற்கு திருத்தணி பகுதியில் மேலும் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்க வேண்டும் என, பேசினார்.மேலும் திருத்தணி தொகுதியில், பத்து அரசு பேருந்துகள் கூடுதல் வழித்தடங்களில் இயக்கி வைத்த அமைச்சருக்கும், திருத்தணி- திருச்செந்துார் வரை புதிய பேருந்து இயக்குவதற்கு அனுமதி வழங்கி, பேருந்து இயக்கி வைத்தற்கும் எம்.எல்.ஏ., சந்திரன் நன்றி தெரிவித்து பேசியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !