உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பயன்பாடில்லாத குடிநீர் தொட்டி ஸ்ரீதேவிக்குப்பம் மக்கள் அவதி

பயன்பாடில்லாத குடிநீர் தொட்டி ஸ்ரீதேவிக்குப்பம் மக்கள் அவதி

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் ஏகாட்டூர் ஊராட்சிக்குட்பட்டது ஸ்ரீதேவிக்குப்பம். இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் சிறுமின் விசை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வந்தது. இந்த குடிநீர் தொட்டியில் மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுதால் கடந்த ஐந்தாண்டுகளாக பயன்படுத்த முடியாமல் பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏகாட்டூர் ஊராட்சியில் ஆய்வு செய்து குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, ஸ்ரீதேவிக்குப்பம் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ