மேலும் செய்திகள்
கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பியவர் போலீசில் புகார்
8 minutes ago
வருவாய் மாவட்ட கால்பந்து அம்பத்துார் அரசு பள்ளி வெற்றி
8 minutes ago
பஞ்செட்டியில் பாலம் சேதம்: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
10 minutes ago
கும்மிடிப்பூண்டி: சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள உணவகங்கள் முன் நிறுத்தப்படும் வாகனங்களால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் - கும்மிடிப்பூண்டி வரையிலான சாலையோரம், ஏராளமான உணவகங்கள் உள்ளன. இங்கு வரும் வாகன ஓட்டிகள், வாகனங்களை இணைப்பு சாலையோரம் நிறுத்தி உணவருந்த செல்கின்றனர். ஆனால், பெருவாயல், வேர்க்காடு, கும்மிடிப்பூண்டி பைபாஸ் ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்களுக்கு வரும் பெரும்பாலான கனரக வாகன ஓட்டிகள், இணைப்பு சாலையை தவிர்த்து, தேசிய நெடுஞ்சாலையோரம் வாகனங்களை நிறுத்தி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், அதே திசையில் பின்னால் வேகமாக வரும் பிற வாகன ஓட்டிகள், சாலையோரம் நிற்கும் கனரக வாகனங்களால் திக்குமுக்காடி போகின்றனர். சில சமயம், நின்றிருக்கும் வாகனங்கள் மீது, பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றன. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ரோந்து படையினர் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார், மேற்கண்ட பகுதிகளில் காண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். எனவே, ஆபத்தாக நிறுத்தப்படும் வாகனங்களை, இணைப்பு சாலையில் நிறுத்த வலியுறுத்த வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 minutes ago
8 minutes ago
10 minutes ago