உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நீர்நிலைகளில் எச்சரிக்கை பதாகை அவசியம்

நீர்நிலைகளில் எச்சரிக்கை பதாகை அவசியம்

ஆர்.கே. பேட்டை:ஆர்.கே. பேட்டை ஒன்றியத்தில், ஊராட்சி மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் நூற்றுக்கணக்கான ஏரிகள் உள்ளன. ஐந்து ஆண்டுகளாக பருவமழை சீராக பெய்து வருவதால், அனைத்து ஏரிகளும், குளம், குட்டைகளும் நிரம்பியுள்ளன.இதனால், நிலத்தடி நீர்மட்டம் சிறப்பாக அமைந்துள்ளது. விவசாயம் செழிப்பாக நடந்து வருகிறது. தொடர்ந்து நிரம்பியுள்ள ஏரிகளில் ஏராளமானோர் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, மீன் பிடிப்பு தொழிலும் பகுதிவாசிகளுக்கு கை கொடுத்து வருகிறது.இந்நிலையில், நீர்நிலைகளில் சிறுவர்கள் ஆபத்தை உணராமல் அவற்றில் நீச்சல் பழகி வருகின்றனர். அவ்வப்போது, சில விபரீதங்களும் ஏற்பட்டு வருகின்றன.இவற்றை தவிர்க்க நீர்நிலைகளில் சிறுவர்களை எச்சரிக்கும் விதமாக விளம்பரப் பதாகைகளை நிறுவ வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குறிப்பாக, வார விடுமுறை நாட்களில் சிறுவர்கள், ஏரிகள் குளங்களில் குழுவாக நீச்சல் பழகுவதில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !