உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நீர்நிலைகள், வரத்து கால்வாய் துார்ந்து போனதால் வறண்டன!: அதிகாரிகள் அலட்சியத்தால் விவசாயமும் பாதிப்பு

நீர்நிலைகள், வரத்து கால்வாய் துார்ந்து போனதால் வறண்டன!: அதிகாரிகள் அலட்சியத்தால் விவசாயமும் பாதிப்பு

கடம்பத்துார்: திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1,167 ஏரிகளில், 950க்கும் மேற்பட்ட ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. வரத்து கால்வாய்கள் சீரமைப்பு மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதே காரணம் என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கூவம், கொசஸ்தலை, அடையாறு, ஆரணி ஆகிய ஆறுகளின் கீழ் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில், 586 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளை நம்பி, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.இதில், ஏரிகளுக்கு நீர் வரும் வரத்து கால்வாய்கள் போதிய பராமரிப்பு இல்லாததால், புதர் மண்டி வீணாகி வருகின்றன. மேலும், பல ஏரிகளின் வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால், தண்ணீர் சேமிப்பதில் ஏற்பட்ட சிக்கலில் ஏரிகள் நீரின்றி வறண்டு இருக்கின்றன.மேலும், ஏரிகளில் துார்வாரும் பணி என்ற பெயரில் முறைகேடாக இஷ்டப்படி சவுடு மண் அள்ளப்பட்டதால், பல ஏரிகளில் நீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால், ஏரிகள் பள்ளத்தாக்காக மாறியுள்ளதோடு, புதர்மண்டி இருப்பதால், தற்போது ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் வறண்டுள்ளன.இதனால், இந்த ஏரியை நம்பியுள்ள விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு, அதிகாரிகள் அலட்சியமே காரணம் என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும், பல ஏரிகள் முறையான பராமரிப்பில் இல்லாததால், ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி குடியிருப்புகளாகவும், விளை நிலங்களாகவும், சில ஏரிகள் குப்பை கொட்டும் இடமாகவும் மாறியுள்ளன.மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 586 ஏரிகளில், 450 ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள பல ஏரிகள், அரசியல் கட்சியினர் தலையீட்டால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை' என குற்றம் சாட்டுகின்றனர்.அதேபோல, ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 581 ஏரிகளில், 500க்கும் மேற்பட்ட ஏரிகள் நீரின்றி வறண்டு கிடக்கின்றன.இதில், ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து கால்வாய் புதர் மண்டி கிடப்பதால், ஏரிகளுக்கு நீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,176 ஏரிகளில், 950க்கும் மேற்பட்ட ஏரிகள் சொட்டு நீர் இல்லாமல் வறண்டு கிடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, வரத்து கால்வாய்களை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மொத்த ஏரிகள் - 1167

நீர்ப்பிடிப்பு சதவீதம் ஏரிகள் எண்ணிக்கை100 091 - 99 081 - 90 1271 - 80 2051 - 70 3026 - 50 500 - 25 1050 950மொத்தம் 1,167


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி