உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மொபைல்போன் பறித்தவருக்கு வலை

மொபைல்போன் பறித்தவருக்கு வலை

திருத்தணி:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார், 40. தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று காலை, மனைவியுடன் திருத்தணி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, ஓசூருக்கு செல்வதற்காக திருத்தணி பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.அப்போது, பேருந்தில் ஏற முயன்ற விஜயகுமாரிடம், மர்ம நபர் ஒருவர், மொபைல்போனை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.இதுகுறித்து விஜயகுமார் அளித்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார் மொபைல்போன் திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !