சுத்திகரிப்பு நிலையம் அமைத்து என்ன பயன்?
திருவாலங்காடு:வி.ஜி.கே.புரம் கிராமத்தில் நவீன சுத்திகரிப்பு நிலையம் அமைத்தும், பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருவதாக, பகுதி மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் ஊராட்சி வி.ஜி.கே.புரம் கிராமத்தில், திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ., நிதியில், 2017 -- 18ம் ஆண்டு 5.50 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த சுத்திகரிப்பு நிலையம், ஐந்து ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதனால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். மேலும், சுத்திகரிக்கப்பட்ட 25 லிட்டர் குடிநீரை, 30 - 40 ரூபாய் வரை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இந்நிலையில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.