உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளி வளாகங்களில் செடி, கொடிகள் அகற்றப்படுமா?

பள்ளி வளாகங்களில் செடி, கொடிகள் அகற்றப்படுமா?

திருவாலங்காடு: அரசு பள்ளி வளாகத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற, பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர். திருவாலங்காடு ஒன்றியம் ராஜபத்மாபுரத்தில் அரசு துவக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 30க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில், செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால், பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே, இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி