உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கிராமப்புற சாலைகளில் சோதனை தீவிரப்படுத்தப்படுமா?

கிராமப்புற சாலைகளில் சோதனை தீவிரப்படுத்தப்படுமா?

ஆர்.கே.பேட்டை:திருவள்ளூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தை ஒட்டி உள்ளது.சித்துார் மாவட்டம், பாலசமுத்திரம் பகுதியில் இருந்து, தமிழகத்திற்கு நரசிம்மபேட்டை, மட்டவலம், திருநாதராஜபுரம், நாகபூண்டி, தீனபந்துபுரம் வழியாக தார் சாலை வசதி உள்ளது.இந்த சாலைகளில், காவல் சோதனைச்சாவடிகள் இல்லை என்பதால், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் எந்தவித சோதனைகளுக்கும் உட்படுவது இல்லை.மாநில நெடுஞ்சாலை மார்க்கமாக பயணிக்கும் வாகனங்கள் மட்டுமே சோதனைசாவடிகளை கடந்து செல்கின்றன.ஆர்.கே.பேட்டை அடுத்த, நரசிம்மபேட்டை வழியாக மலை கணவாயை கடந்து விரைவாக பாலசமுத்திரம் எல்லைக்குள் வாகனங்கள் செல்ல முடியும்.சமீபகாலமாக, ஆந்திர மாநிலம், நகரியில் இருந்து, பொன்பாடி சோதனைச்சாவடியை கடக்கும் வாகனங்களில், கஞ்சா அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டுவரும் நிலையில், கிராமப்புற சாலைகளிலும் போலீசார் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என, சமூகஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ