உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ராமசமுத்திரம் சமத்துவபுரம் பகுதிக்கு மீண்டும் மினி பஸ் இயக்கப்படுமா?

ராமசமுத்திரம் சமத்துவபுரம் பகுதிக்கு மீண்டும் மினி பஸ் இயக்கப்படுமா?

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியம், ராமசமுத்திரம் ஊராட்சியில், 2011ல் சமத்துவபுரம் குடியிருப்பு கட்டப்பட்டது. பயனாளிகள் வசம் ஒப்படைக்கும் முன், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், 12 ஆண்டுகளாக, குடியிருப்புகள் வீணாக பூட்டிக் கிடந்தன.கடந்த ஆண்டு, இந்த குடியிருப்புகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு பயனாளிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 2011ல், இந்த குடியிருப்புகள் கட்ட துவங்கிய போது இவ்வழியாக ஆர்.கே.பேட்டையில் மத்துாருக்கு மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதனால், சமத்துவபுரத்தில் இருந்து வெளியூர்களுக்கு நேரடியான போக்குவரத்து வசதி இருந்தது. கடந்த 2020ல் இந்த தடத்தில் மினி பேருந்து சேவை விலக்கிக்கொள்ளப்பட்டது. தற்போது, இந்த சமத்துவபுரத்தில் பயனாளிகள் குடியேறி வசித்து வரும் நிலையில், மினி பேருந்து சேவை இல்லாததால், இங்குள்ளவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.வெளியூர் பயணம் மேற்கொள்ள பேருந்து வசதி இன்றி தவித்து வருகின்றனர்.நொச்சிலி கூட்டு சாலை வரை நடந்து சென்று பேருந்து பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. மீண்டும் இந்த தடத்தில் மினி பேருந்து இயக்க வேண்டும் என, சமத்துவபுரத்தில் வசிப்பவர்கள் எதிர்பார்க்கின்றனர்.மேலும் சமத்துவபுரத்தில் மழைநீர் கால்வாய்கள் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தெருக்களுக்கு இடையே பாலம் அமைத்து, மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்த கால்வாய்களில் தற்போது, மரக்கன்றுகள் வளர துவங்கியுள்ளன. இதனால், கால்வாய் சேதமடையும், மழைநீர் வெளியேறுவதிலும் சிக்கல் ஏற்படக்கூடும்.மேலும், தெருவின் பெயர்பலகையும் உடைந்து விழுந்து கிடக்கிறது. இவற்றை உடனடியாக சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ