உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தண்ணீர் தேடி தவிக்கும் கால்நடைகள் கவனிக்குமா ஊராட்சி மன்ற நிர்வாகம்

தண்ணீர் தேடி தவிக்கும் கால்நடைகள் கவனிக்குமா ஊராட்சி மன்ற நிர்வாகம்

பொன்னேரி:கால்நடைகளின் குடிநீர் தேவைக்கு கட்டப்பட்ட, தொட்டிகள் பராமரிப்பு இன்றி காலியாக இருப்பதால், கால்நடைகள் நீர் ஆதாரம் இன்றி தவித்து வருகின்றன.மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில், கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக, ஆங்காங்கே தரைமட்ட தொட்டிகள் கட்டப்பட்டன.தொட்டிகளில் எப்போதும் தண்ணீர் தேக்கி வைத்து, அவற்றை கால்நடைகள் பயன்படுத்துவதற்காக இந்த திட்டம் செயலுக்கு கொண்டு வரப்பட்டது. குறிப்பாக கோடையில் கால்நடைகளின் தவிப்பை போக்குவதற்கான திட்டமாகும். இதற்காக ஒவ்வொரு தொட்டியின் கட்டுமான பணிக்காக, 20,000 ரூபாய் செலவிடப்பட்டது.இவற்றை தண்ணீர் தேக்கி வைப்பது அந்த ஊராட்சி நிர்வாகங்களின் பணியாகும். ஆனால், இவை உரிய முறையில் பராமரிக்கப்படாமல் இருக்கின்றன.மழைக்காலங்களில் மட்டுமே, மழைநீர் நிரம்புகிறது. மற்ற காலங்களில் காலியாகவே இருப்பதால் கால்நடைகளின் குடிநீர் ஆதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது.குறிப்பாக கோடையில், நீர்நிலைகளும் வறண்டு விடுதால், கால்நடைகள் தண்ணீர் தேடி அலைகின்றன. ஆங்காங்கே உள்ள கூட்டு குடிநீர் திட்டத்திற்கு செல்லும் பைப்லைன்கள் உடைந்து வீணாகும் தண்ணீரை பருகுகின்றன.அரசு கொண்டு திட்டங்களை, அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்காமல் விடுவதால், இதுபோன்ற திட்டங்கள் பயனற்றதாக மாறுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை