உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழவேற்காடில் கிளிஞ்சல்கள் சேகரிப்பில் பெண்கள் ஆர்வம்

பழவேற்காடில் கிளிஞ்சல்கள் சேகரிப்பில் பெண்கள் ஆர்வம்

பழவேற்காடு : பழவேற்காடு கடல் பகுதியில், சில தினங்களாக கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கிறது. பல்வேறு காரணங்களால் கடலில் உயிரிழக்கும் கிளிஞ்சல் ஓடுகள் ஆர்ப்பரித்து வரும் அலைகளில் அடித்து வரப்பட்டு கடற்கரை முழுதும் ஒதுங்குகின்றன.வைரவன்குப்பம், பழைய சாட்டனகுப்பம், கோரைகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் பெண்கள் அவற்றை சேகரித்து வருகின்றனர். மேலும், முகத்துவாரம் அருகே உள்ள கடற்கரை பகுதிகளிலும் இவை அதிகளவில் இருப்பதால், அவற்றை சேகரித்து படகுகளில் கொண்டு வந்து ஏரியின் கரைகளில் கொட்டி வைத்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்.ஓடுகள் உடையாமல் இருப்பவை கலை பொருட்களை தயாரிக்கவும், மற்றவை சுண்ணாம்பு தயாரிக்க அதற்கான தொழிற்சாலைகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.இது குறித்து மீனவர்கள் கூறியதாவது:கடலில் கிடைக்கும் அனைத்தும் உயிரினங்களும், ஏதேனும் ஒரு வகையில் மனித இனத்திற்கு பயன்படுகிறது. மீன், இறால் உள்ளிட்டவை உணவு தேவைக்கும், சங்கு,கிளிஞ்சல் ஆகியவை கலை பொருட்கள் தயாரிக்கவும் உதவுகின்றன.இதன் வாயிலாக வருவாய் ஈட்டுவதற்கும் உகந்ததாக இருக்கிறது. டிசம்பர் - ஜனவரி மாதங்களில் கிளிஞ்சல்கள் அதிகளவில் கரை ஒதுங்கும். அவற்றை சேகரித்து வருவாய் ஈட்டி, அன்றாட செலவினங்களுக்கு பயன்படுத்துகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை