கூடுதல் வகுப்பறை கட்டடம் அரசு பள்ளியில் பணி துவக்கம்
திருத்தணி, அரசு உயர்நிலை பள்ளிக்கு கூடுதலாக இரு வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகளை, எம்.எல்.ஏ., சந்திரன் நேற்று துவக்கி வைத்தார். திருவாலங்காடு ஒன்றியம் தும்பிக்குளம் கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு போதிய வகுப்பறை கட்டடம் இல்லாததால், நபார்டு வங்கி திட்டத்தின் கீழ், 40 லட்சம் ரூபாய் மதிப்பில், கூடுதலாக இரு வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. நேற்று திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், வகுப்பறை கட்டட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். “இப்பணிகள் மூன்று மாதத்திற்குள் முடித்து, பயன்பாட்டிற்கு விடப்படும்,'' என, எம்.எல்.ஏ., சந்திரன் தெரிவித்தார். இதை தொடர்ந்து, பூனிமாங்காட்டில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தையும் துவக்கி வைத்தார்.