உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கனவு இல்லம் திட்ட பயனாளிகள் 4,204 பேருக்கு பணி ஆணை வழங்கல் வீடு கட்டும் பணியை உடனே துவக்க கலெக்டர் அறிவுரை

கனவு இல்லம் திட்ட பயனாளிகள் 4,204 பேருக்கு பணி ஆணை வழங்கல் வீடு கட்டும் பணியை உடனே துவக்க கலெக்டர் அறிவுரை

திருவள்ளூர், தமிழகத்தில், 2030க்குள் குடிசை வீடு இல்லாத மாநிலமாக மாற்ற, கலைஞர் கனவு இல்ல திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநிலம் முழுதும், 8 லட்சம் கான்கிரீட் வீடுகளை, தமிழக அரசு கட்டித் தரும் என, நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற, தமிழக அரசு 3.50 லட்சம் ரூபாய் வழங்க உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 526 ஊராட்சிகளில், 1,780க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் குடிசை வீடுகள் குறித்து வருவாய், ஊரக வளர்ச்சி துறையினர், 2023 - 24ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தினர்.அதில், மாவட்டத்தில் 4,000 கான்கிரீட் வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பயனாளிகள் ஊராட்சி அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்தனர். அதே ஆண்டு, 4,954 பேருக்கு வீடு கான்கிரீட் வீடு கட்ட பணி ஆணை வழங்கப்பட்டது.ஆனால், பலரும் உடனடியாக வீடு கட்டாததால், 4,000 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். அவற்றில், 90 சதவீதம் பேர் வீடுகளை கட்டி முடித்துள்ளனர்.இந்த நிலையில், நடப்பாண்டிற்கான 4,204 பேருக்கு வீடு கட்ட இலக்கு நிர்ணியக்கப்பட்டது. இதற்காக, கடந்தாண்டு மற்றும் நடப்பாண்டில் உரிய ஆவணங்களுடன் வரப்பெற்ற விண்ணப்பங்களை, கலெக்டர் தலைமையிலான வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் பரிசீலனை செய்தனர்.சம்பந்தப்பட்ட குடிசை வீடுகளுக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.இதில், தகுதி வாய்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த ஆண்டை விட அதிகபட்சமாக, நடப்பாண்டில், 4,204 கான்கிரீட் வீடுகள் கட்ட பணி நிர்வாக ஆணை ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் கூறியதாவது:நடப்பு 2025 - 26ம் ஆண்டில், திருவள்ளூர் மாவட்டத்தில் 4,204 குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற நிர்வாக அனுமதி மற்றும் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. தற்போது, கான்கிரீட் வீடு கட்டுவதற்கான, அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.பணி ஆணை பெற்றவர்கள் உடனடியாக பணியை துவக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சில இடங்களில் 'பேஸ்மென்ட்' வரை கட்டடம் கட்டப்பட்டு உள்ளது.கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பணி உத்தரவு வழங்கிய பயனாளிகளுக்கு, மூன்று விதமாக பணம் விநியோகிக்கப்படும். மூன்று கட்டமாக, 3.10 லட்சம் ரூபாய், பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.மேலும் பயனாளிகளுக்கு, 'டான்செம்' வாயிலாக, 130 மூட்டை சிமென்ட், 285 ரூபாய் மானிய விலையில் வழங்கப்படும். இன்னும் ஒரு சில நாட்களுக்குள் சிமென்ட் மூட்டைகள், அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலக குடோன்களுக்கு வந்து விடும்.பணி ஆரம்பித்த பயனாளிகள், அதற்கான ஆவணத்தை காண்பித்து, தேவையான சிமென்ட் மூட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்.பணி ஆணை மற்றும் நிர்வாக அனுமதி பெற்றோர், வீடு கட்டும் பணியை உடனடியாக துவங்காவிட்டால், அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆணை ரத்து செய்யப்பட்டு, மாற்று பயனாளிகளுக்கு அந்த அனுமதி மாற்றி வழங்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில்நிர்வாக அனுமதி பெற்றோர் விபரம்ஒன்றியம் பயனாளி எண்ணிக்கைஎல்லாபுரம் 500கும்மிடிப்பூண்டி 769கடம்பத்துார் 420மீஞ்சூர் 430பள்ளிப்பட்டு 540பூந்தமல்லி 41பூண்டி 312புழல் 6ஆர்.கே.பேட்டை 373சோழவரம் 208திருத்தணி 160திருவாலங்காடு 251திருவள்ளூர் 167வில்லிவாக்கம் 28மொத்தம் 4,204


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை