உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 17வது மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி பலி

17வது மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி பலி

ஓட்டேரி: ஓட்டேரி, ஸ்டீபன்சன் சாலையில் ரெயின்போ கன்ஸ்ட்ரக் ஷன் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணி நடக்கிறது. இதில், 17 மாடியில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.இதில், பீஹார் மாநிலம், மெகபா மாவட்டத்தைச் சேர்ந்த ராம் பரீத்குமார், 26, என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று பிற்பகல் 3:00 மணியளவில், மாடிகளுக்கு கட்டுமான பொருட்களை எடுத்து செல்லும், 'லிப்ட்'டில் பணியில் இருந்தார்.பொருள்களை 17வது மாடிக்கு இறக்கும் பணியின்போது காலிடறி கீழே விழுந்துள்ளார். உடனடியாக சக தொழிலாளர்கள், '108' ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர் தீபக், ராம் பரீத்குமாரை பரிசோதித்ததில், அவர் இறந்தது தெரியவந்தது.ஓட்டேரி போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கட்டுமான பணியின்போது, விபத்து, அசம்பாவிதங்களை தடுக்க உரிய பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்த வேண்டும். ஆனால், பாதுகாப்பு உபகரணங்களின்றி பணியில் ஈடுபட்டதே உயிரிழப்பிற்கு காரணமாகி உள்ளது என, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை