சிறுவனை தாக்கிய வழக்கில் வாலிபர் கைது
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் கோரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடந்த ஏப்ரல் மாதம் கே.ஜி.கண்டிகை பஜார் பகுதிக்கு சென்றார். அப்போது, முன்விரோதம் காரணமாக செருக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பராஜ், அவரது நண்பர்கள் 6 பேர், சிறுவனை இரு சக்கர வாகனத்தில் செருக்கனூர் கிரிக்கெட் மைதானத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்து சிறுவனின் சகோதரி யமுனா சென்று கேட்டதற்கு அவரையும் தாக்கி பட்டாகத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, 5 பேரை கைது செய்தனர்.தலைமறைவாக இருந்த புஷ்பராஜ், 22 என்பவரை நேற்று திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன் கைது செய்தார்.