உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

திருத்தணி: திருத்தணி நேருநகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி பாக்கியா, 58. இவர் மொபைல் போனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், 26 என்பவர் தொடர்பு கொண்டு, தகாத வார்த்தைகளால் பேசினார். இதைக் கண்டித்த பாக்கியாவின் வீட்டிற்கு நேற்று காலை கார்த்திக்கேயன் நேரில் சென்று பாக்கியாவை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து கார்த்திக்கேயனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்