உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி கோவில் ஊழியரை தாக்கிய வாலிபர் சிக்கினார்

திருத்தணி கோவில் ஊழியரை தாக்கிய வாலிபர் சிக்கினார்

திருத்தணி,திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான சரவணபொய்கை விடுதியில், மேல்திருத்தணியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், 36, என்பவர் வேலை செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, மது போதையில் விடுதிக்குள் நுழைந்த மூன்று வாலிபர்கள், பாலகிருஷ்ணனிடம் தகராறு செய்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்தவர் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.திருத்தணி போலீசார் விடுதியில் இருந்த 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்ததில், திருத்தணி செட்டித்தெருவைச் சேர்ந்த லோகேஷ், 29, அவரது நண்பர்கள் சூர்யா, மோகன் என, தெரியவந்தது. நேற்று லோகேஷை கைது செய்த போலீசார், சூர்யா, மோகன் ஆகியோரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை