மேலும் செய்திகள்
டூ - வீலரில் மதுவிற்றவர் சிக்கினார்
28-Nov-2024
திருவள்ளூர்:திருவள்ளூர் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் விடையூர் பகுதியில் கொசஸ்தலை ஆறு அருகே ரோந்து பணி மேற்கொண்டனர். அ்ப்போது, ஆற்றுப்படுகையில் இருசக்கர வாகனத்தில் மணல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தவர் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றார்.போலீசார் அவரை பிடித்து நடத்திய விசாரணையில், அவர், விடையூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார், 35, என்பதும், அனுமதியின்றி கொசஸ்தலை ஆற்றில் 25 கிலோ வீதம் இரு மணல் மூட்டைகளை, 'பேஷன்புரோ' இருசக்கர வாகனத்தில் கடத்தியது தெரிய வந்தது.இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் செல்வகுமாரை கைது செய்து, மணல் மூட்டைகள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
28-Nov-2024