மேலும் செய்திகள்
டூ -- வீலரில் சென்றவர் கார் மோதி உயிரிழப்பு
01-Apr-2025
திருவள்ளூர். திருவள்ளூர் அடுத்த காக்களூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில், இருசக்கர வாகனத்தில் மீது அமர்ந்திருந்த வாலிபரை திருடன் என நினைத்து, பகுதிவாசிகள் சரமாரியாக தாக்கினர். தகவலறிந்து விரைந்து வந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், இளைஞரை மீட்டனர். விசாரணையில், அந்த அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் மகன் மணிகண்டன், 35, என தெரிய வந்தது. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த இவருக்கு, செவிலியராக பணிபுரியும் திவ்யா, 30, என்ற மனைவி உள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டன், சென்னையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில், ஆறு மாதமாக தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், இருசக்கர வாகனத்தின் மீது அமர்ந்திருந்த அவரை, அப்பகுதிவாசிகள் சிலர் இருசக்கர வாகனத்தை திருடுவதாக நினைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். அந்த இளைஞரை மனைவியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், போலீசார் கூறுகையில், 'சந்தேகம் இருந்தால் முதலில் காவல் துறைக்கு தகவல் அளியுங்கள். இதுபோல் தாக்குதலில் ஈடுபட கூடாது' என எச்சரித்தனர்.
01-Apr-2025