மேலும் செய்திகள்
மேல்மருவத்துாரில் பைக் திருடிய நபருக்கு 'காப்பு'
13-Oct-2025
திருமழிசை: திருமழிசையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். திருமழிசை அடுத்த கீழமணம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன், 32. மெக்கானிக்கான இவருக்கு மகாலட்சுமி, 30; என்ற மனைவியும் 9 மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் இரு மகன்களும் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் பாலசந்தர், 32, என்பவருடன் யமஹா இரு சக்கர வாகனத்தில் பூந்தமல்லி சென்று விட்டு கீழ்மணம்பேடுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, திருமழிசை அருகே, பின்னால் வந்த லாரி இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலசந்தர் காயமின்றி தப்பினார். பூந்தமல்லி போக்கு வரத்து போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
13-Oct-2025