உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இறுதி ஊர்வலத்தில் தகராறு வாலிபர் படுகாயம்

இறுதி ஊர்வலத்தில் தகராறு வாலிபர் படுகாயம்

பொதட்டூர்பேட்டை:இறந்தவரின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் காயமடைந்தார். பொதட்டூர்பேட்டை, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், 55. இவர் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் இறந்தார். அவரது இறுதி ஊர்வலம் அன்று மாலை நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த சற்குணம் மகன் அஜித்குமார், 25, அந்த பாதையில் மலர்களை துாவி வந்தார். இதில், அதே தெருவை சேர்ந்த சஞ்சய், 25, என்பவர் மீது பூக்கள் விழுந்துள்ளன. இதனால், ஆத்திரம் அடைந்த சஞ்சய், அவரது தந்தை ராம்ராஜ், 48, சிவகிரி, 20, ஆகியோர் அஜித்குமாரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அஜித்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை