உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / மரத்தில் கார் மோதியதில் நகைக்கடை ஊழியர் பலி

மரத்தில் கார் மோதியதில் நகைக்கடை ஊழியர் பலி

நீடாமங்கலம்:திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்தவர், ரவிச்சந்திரன், 61, நகைக்கடை பணியாளர். இவரது மனைவி முருகவள்ளி, 55. இவர்கள், குடும்பத்தினருடன், திருவண்ணாமலை கோவிலுக்கு காரில் சென்று விட்டு, நீடாமங்கலம் வழியாக, நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, மன்னார்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். ரவிச்சந்திரன் மருமகன் பூபதி, 33, காரை ஓட்டினார். நீடாமங்கலம் அருகே, காளாஞ்சிமேடு என்ற கிராமத்தில், கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக, சாலையோர புளிய மரத்தில் மோதியது. இதில், ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.காரில் பயணம் செய்த முருகவள்ளி, காரை ஓட்டிய பூபதி, ரவிச்சந்திரன் மகள்கள் ஐஸ்வர்யா, 29, பிரீத்தி, 26, பூபதியின் தந்தை சுப்பிரமணியன், 70, ஆகியோர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த, போலீசார், காயம் அடைந்த ஐவரையும் மீட்டு, மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.நீடாமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.s


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ